Home செய்திகள் வளையன் குளத்தில் தைப்பொங்கலுக்கு தயாரான மண்பானைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் .

வளையன் குளத்தில் தைப்பொங்கலுக்கு தயாரான மண்பானைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் .

by mohan

விவசாயிகளுக்கு உதவுவதுபோல் மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்த மண் பானை ,மண்அடுப்பு பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசிற்கு கோரிக்கைதொடர் மழையினால் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்பானையில் விற்பனை செய்ய முடியாததால் சோகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர்.இவர்கள் ஆண்டு முழுவதும் மண்பானை , மட்பாண்டம் அடுப்பு மற்றும் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் .தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் மட்பாண்ட தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட மட்பாண்டங்களை வெளியே விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன.இதனால் ரூபாய் 40 லட்சத்திற்கும் அதிகமான பண்டங்கள் விற்பனை செய்ய முடியாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.மேலும் தமிழக அரசுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பாக கோரிக்கையில் அரசு விவசாயிகளுக்கு உதவும் விதமாக பொங்கலுக்கு கரும்பு, சர்க்கரை, வழங்குவது போல் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு மண்பானை, மண் அடுப்பு வழங்கினால் மட்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும் பழைய தமிழர்களின் கலாச்சார முறைப்படி வீடுகள் தோறும் மட்பாண்டங்கள் மூலம் சமையல் செய்ய முடியும், ஒவ்வொரு வீட்டிற்கும் மண்பானை, அடுப்பு சேர்வதால் தங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை பரிசீலித்து இனி வரும் பொங்கல் காலங்களில் மண்பானை ,மண் அடுப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com