மதுரையில் வேகமாக சென்ற லாரி சிறைபிடிப்பு விடுவிக்கக்கோரி நடந்த மோதலில் 2 பேர் கைது.

மதுரை வேகமாக கட்டுப்பாடில்லாமல் .சென்ற லாரியை சிறை பிடித்தது தொடர்பாக நடந்த மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை மீனாம்பாள்புரம் ஆபீசர்ஸ் டவுன் இரண்டாவது தெரு சந்திப்பில் கட்டுப்பாடில்லாமல் வேகமாக சென்ற லாரியை அப்பகுதி பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இதில் அந்த லாரியை விடுவிக்கக்கோரி செல்லூர் கீழத்தோப்பைச் சேர்ந்த ரமேஷ் 39 மேலப்பொன்னகரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த மன்சூர் 26 மற்றும் மணி உள்பட ஏழுபேர் அந்த லாரியை விடுவிக்கும்படி கூறியுள்ளனர் .இதில் நடந்த வாக்குவாதம் மோதலாக மாற்றியது .இந்த சம்பவத்தில் பூமிநாதன்என்பவர் மீது மற்ற ஏழு பேர் தாக்கியுள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக பூமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் 39 மண்சூர் 26 உள்பட 7 பேர் மீது கூடல்புதூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மற்றும் மன்சூரைகைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்