Home செய்திகள் சத்திரப்பட்டியில் நூல் விலை உயர்வால் பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.

சத்திரப்பட்டியில் நூல் விலை உயர்வால் பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.

by mohan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு இங்கு தயாரிக்கப்படும் பேண்டேஜ் தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.சத்திரப்பட்டி, சம்சிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களும், 500 – க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி நிறுவனங்களும் இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மருத்துவத் துணி பணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி மற்றும் மறைமுக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நூல் விலை உயர்ந்துள்ளதால் மருத்துவ துணி உற்பத்தி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 50 கிலோ நூல் மூடை ரூபாய் 9.500 விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 50 கிலோ மூடை 12,500 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் 17-ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com