Home செய்திகள் விடிய விடிய கொட்டும் மழையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் மீட்ட காவல் உதவி ஆய்வாளர் .

விடிய விடிய கொட்டும் மழையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் மீட்ட காவல் உதவி ஆய்வாளர் .

by mohan

மதுரை எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்கு உட்பட்ட எல்லிஸ் நகர் 70 அடி சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நேற்று மதியம் முதல் ஒருவர் அமர்ந்திருப்பதாக தகவல் வந்தது. மதுபோதையில் இருப்பதாக நினைத்து அப்பகுதி மக்கள் விட்டு சென்றனர் எனினும் இரவே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் அவரது செல்போனில் கொட்டும் மழையில் அமர்ந்திருப்பதை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார் இதன் அடிப்படையில் மீண்டும் இன்று காலை எழுந்து பார்க்கும் பொழுது இடத்தை விட்டு நகராமல் அப்படியே அமர்ந்திருந்தார். உடனடியாக, சமூக ஆர்வலர் காளமேகம் தகவல் தெரிவிக்கவே, அவர் நியூ கிரேசி தன்னார்வு தொண்டு நிறுவனம் மருத்துவர் குளோரி தகவல் தெரிவித்தார்.அதன் பின், மதுரை எஸ் எஸ் காலனி காவல் உதவி ஆய்வாளர் ரத்தினவேலு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அவரும் வரவே மருத்துவர் குளோரி அவருக்கு தேவையான முதலுதவி அனைத்தையும் செய்து 108 வாகனம் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இரவு முழுவதும் மழையில் நனைந்து கை கால்கள் விரைத்து போன நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு. சேர்க்க உதவிய எஸ் எஸ் காலனி காவல் உதவி ஆய்வாளர் ரத்தினவேலு சமூக ஆர்வலர் காளமேகம் மற்றும் மருத்துவர் குளோரி அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்….

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com