தூங்காநகரம் இனி தூய்மையான நகரம்” என்ற தலைப்பின்கீழ் எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் தொடக்கவிழா.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் கான்பெடரேஷன் ஆஃ இந்தியன் இண்டஸ்ட்டரியின்(ஆதாய நோக்கமில்லா அமைப்பு சார்பின்) ஒரு அங்கமாக விளங்கும் எங் இந்தியன்ஸ் என்ற அமைப்பு 18 வயதிலிருந்து 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை கொண்டு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.இந்த அமைப்பின் சார்பாக மதுரை விமான நிலையத்தில் “தூங்காநகரம் இனி தூய நகரம்” என்ற தலைப்பில் மதுரையை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான திட்டத்தின் துவக்க விழாவை மதுரை மாநகர் துணை காவல் ஆணையர் லில்லி கிரேஸ் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூய்மை பணிகள் குறித்த உறுதிமொழியை மதுரை மாநகர் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் வாசிக்க எங் இந்தியா அமைப்பை சார்ந்த நிர்வாகிகளும், மதுரை விமான நிலைய அதிகாரிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்