
சிவபெருமான் ஈ எறும்பு உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்து வாழ்வளிக்க கூடியவர் என்பதை உணர்த்தும் வகையில்ஒவ்வொரு வருடமும் தேய்பிறைதிதியன்று அஷ்டமி தினத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சப்பரங்களில் பவனி வந்து மதுரையில் நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம்.அந்த வகையில் தேய்பிறை அஷ்டமி இன்றுசிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பாக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டுதனித்தனி சப்பரங்களில்கீழமாசி வீதி கீழ வெளி வீதி வெளி வீதி வடக்கு வெளி வீதி உள்ளிட்ட மதுரையின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்ஸ்ரீ சுந்தரேஸ்வரர்பிரியாவிடை ஒரு சப்பரத்திலும் ஸ்ரீமீனாட்சி அம்மன் ஒரு சப்பரத்திலும்விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளினார்.இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சப்பரங்களை வடம் பிடித்து இழுத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.