நான் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை மு.க. அழகிரி:தொண்டனாகவே இருக்கத்தான் விரும்பினேன்:

ஆலோசனைகூட்டத்திற்கு வருகை தந்துள்ள எனது ஆதரவாளர்களுக்கு நன்றிவீட்டிலிருந்து ஆலோசனைகூட்டம் நடைபெறும் இடம்வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்சதிகாரர்களுக்கும் துரோகிகளின் வீழ்ச்சுக்கான முதற்படிக்கட்டு இந்த ஆலோசனைகூட்டம்1980ஆம் ஆண்டு கருணாநிதி கூறியதால் மதுரை வந்தேன்என்னை திமுகவில் இருந்து சில துரோக சக்திகள் கலைஞரிடமும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமலயே என்னை கட்சியில் இருந்து விலக்கிவிட்டார்கள்திமுகவில் நானும் தொண்டன் போல பணியாற்றினேன் பதவிக்கு ஆசைப்பட்டதே இல்லைமதுரையை திமுகவின் கோட்டையாக நான் உழைத்தேன்1993ஆம் ஆண்டு கலைஞரை எதிர்த்து திமுகவை விட்டு வைகோ சென்றபோது திமுகவில் இருந்து ஒரு தொண்டன் கூட வெளியில் செல்லாமல் இருந்தார்கள்*விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் போது என் மீது தவறான புகார்களை கூறியதால் கடந்த 2000 ஆம் ஆண்டு தலைமை என்னை நீக்கியது.2001ல் மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் துணை மேயராக திமுக சின்னச்சாமியை வெற்றி பெறவைத்தேன்2006ஆம் ஆண்டுகளில் மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல், மேற்கு தொகுதி தேர்தலில் வெற்றிபெற்றேன்திருமங்கலம் இடைத்தேர்தல் தொகுதி பார்முலா என்றால் இந்தியாவிற்கு தெரியும் அப்படி ஒரு வெற்றியை பெற்றுகொடுத்தேன்திமுக பார்முலா என்பது பணம் என்றார்கள் ஆனால் பணம் வழங்கவில்லை, கடுமையாக எனது ஆதரவாளர்கள் கலைஞர் போல உழைத்ததுதான் திருமங்கலம் பார்முலாதிருமங்கலம் வெற்றியை பெற்றுகொடுத்ததால் தான் எனக்கு கருணாநிதி தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியை வழங்கினார்கள்திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றிபெற வைத்தேன் இதுவெல்லாம் நான் திமுகவிற்கு செய்த துரோகமா?மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என கூறினேன் மதுரையில், 9 தொகுதிகளிலும் திமுக வென்றது நான் பதவியில் இருந்தபோது தான்*நாகர்கோவிலில் முதன்முறையாக திமுகவிற்கு தொகுதியை பெற்று வெற்றிபெறவைத்தோம்.ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வேண்டும் என பரிசீலனை செய்ததால் அவர் பொருளாளர் ஆனார்.எனக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி கிடைத்ததால் பொறாமையில் பொருளாளர் பதவி கேட்டார் கருணாநிதிக்கு பின் நீ தான் எல்லாம் என ஸ்டாலினிடம் நான் கூறினேன்ஆனால், ஏன் தற்போது இப்படி துரோகம் செய்தார் என தெரியவில்லைநான் மத்திய அமைச்சர் ஆனபோது ஸ்டாலின் துணை முதல்வர் வேண்டும் என கேட்டதாக கருணாநிதி கூறினார் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.கழகத்திற்காக மட்டுமே நான் பணிபுரிந்தேன்திமுக உறுப்பினர்கள் பட்டியல் என்ற பெயரில் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பெயரை காட்டி கருணாநிதியை ஏமாற்றியதை சுட்டிக்காட்டினேன்*எனது பிறந்தநாளிற்காக எனது ஆதரவாளர்கள் அடித்த நோட்டிசைவருங்கால முதல்வரே என நிரந்தரமாக திமுகவினர் போஸ்டர் அடித்துவைத்துள்ளார்கள்ஸ்டாலின் முதல்வராக ஆகவே முடியாது7ஆண்டுகளாக பொறுமையாக இருந்துவிட்டோம்நான் எந்த முடிவு அறிவித்தாலும் அதனை எனது ஆதரவாளர்கள் ஏற்றுகொள்வார்கள்2016ல் கருணாநிதியை கட்டாயபடுத்தி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவைத்தார்கள் , வேண்டுமென்றே அவரை மேடையில் ஏற்றி அவரின் உடல்நலனை கெடுக்கவைத்தார்கள்விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்எதையும் சந்திக்க தயாராக இருங்கள்உங்களுக்காக நான் உழைப்பேன்என்னுடைய உழைப்பால் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரோகம் செய்துவிட்டனர்ஸ்டாலினை கலைஞரை மிஞ்சிவீட்டீர்கள் என கூறுவதை யார் ஏற்பார்கள்கருணாநிதியை போல யாரும் உருவாக முடியாது அப்படிப்பட்ட கலைஞரையே மறந்து திமுக தற்போது செயல்படுகிறதுகருணாநிதியின் பெயரை நினைவுகூறும் வகையில் உச்சரிக்கும் வகையில் எனது முடிவு அமையும்எனது முடிவு அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம் எப்படியும் இருக்கலாம்எனது ஆதரவாளர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்