
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து மொத்தமாக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தீவிரமாக கண்காணித்த எஸ் எஸ் காலனி காவல் நிலைய எஸ் ஐ விஜயகுமார் தலைமையிலான போலீசார் காளிமுத்து நகர் பகுதியில் மோட்டார் அறையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 29 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பொன் மேனி யை சேர்ந்த மகேந்திரன் மகபூப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், சிந்தாமணி குருநாதன் கோவில் பின்புறம் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சாவை அவணியாபுரம் எஸ் ஐ தண்டீஸ்வரன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர் .இது தொடர்பாக , பகவதி வயது 22 பிரபாகரன் 22 கருப்புசாமி 22 மற்றும் சரவணகுமார் 25 ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய அருண் ஜெயராஜ் மற்றும் வாழைத்தோப்பு விஜய் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.