பொங்கல் பரிசு வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நகை பணம் மோசடி மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்

மதுரை பொங்கல் பரிசு வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி நகை பணம் மற்றும் ஆதார் கார்டுடன் தப்பி ஓடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை கரும்பாலை கீழத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சரோஜா இவர் சொந்த வேலை காரணமாக மாவட்ட நீதிமன்றத்துக்கு சென்று ள்ளார் அங்கு நீதிமன்ற வளாகத்திற்குள் அந்த பெண்ணை சந்தித்த மர்ம நபர் பொங்கல் பரிசு வாங்கித் தருவதாக கூறி அந்தப் பெண் வைத்திருந்த மணிபர்சை வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் அந்த மணிபர்சில் அரை பவுன் நகை பணம் ரூபாய் 2575 மற்றும் ஆதார் கார்டு ஸ்மார்ட் கார்டு வீட்டு சாவி அனைத்தும் இருந்தன அவற்றுடன் அங்கிருந்து தப்பி ஓடிய வாலிபரை அண்ணாநகர் போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்