மதுரையில் டிசம்பர் 26 முதல் ஜனவரி 5வரை தொடர் போராட்டமாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் இயக்கம் நடைபெற்று வருகிறது ஜனவரி 3 அன்று மதுரை மத்திய தொகுதி சார்பில் திருமங்கலம் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.இறுதியாக மதுரை மாவட்டம் சார்பாக ரயில் நிலையம் எதிரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.டிசம்பர் 31 இரவு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு தெற்கு மத்திய தொகுதிகளின் சார்பில்2021ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்போம்!டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்போம்! புதிய வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி! மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் மதுரையில் ஒன்பது இடங்களில நடைபெறுகிறதுகட்டபொம்மன் சிலை அருகில் நடைபெற்றது போராட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, மத்திய தொகுதி செயலாளர் அபுதாகிர் தலைமையில் நடைபெற்றது இதேபோல் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் சுப்பிரமணியன் சீமான் சிக்கந்தர் தொகுதி நிர்வாகிகள் தாஜுதீன், பகுர்தீன், பிலால் தீன் ஆகியோர் பங்கேற்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.