
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வில்லாபுரம் பகுதியில் உள்ள விவேகானந்தர் தெருவை சேர்ந்த கூலிதொழிலாளியான கோபி என்பவரது மனைவி தேவி என்பவர் நேற்று நண்பகலில் தனது கைக்குழந்தையுடன் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது,அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் வில்லாபுரத்தில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு அருகே CCTV பொறுத்தப்படாத சந்தில் தேவியை வழிமறித்து பட்டன் கத்தியை காட்டி அவரிடமிருந்த கைபையை பறித்து சென்றுள்ளனர்.அதில் 2500 ரூபாய் பணம், 2 சவரன் தங்க சங்கிலி மற்றும் மோதிரம் உள்ளிட்டவைகள் இருந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர், மேலும் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த cctv காட்சிகளை ஆய்வு செய்ததில்,தேவி தெரிவித்த அடையாளங்களுடன் கூடியவர்கள் தேவியை பின்தொடர்ந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அவனியாபுரம் போலீசார் cctv காட்சிகளை ஆதாரமாககொண்டு விசாரணை மேற்கொண்டதில்,வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது, கீரைத்துறை திருக்கண் மகன் முத்துக்குமார் (வயது 14) மற்றும் சோலைச்சாமி மகன் காலீஸ்வரன் (வயது 17) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் அவனியாபுரம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை மீட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் இதுபோன்று சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்று போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.