இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் குணசேகரன் என்பவர் வீட்டு அருகே மலைப்பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து இராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடுத்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மலைப் பாம்பை பிடிக்க முயற்சித்தனர் பாம்பு முட்புதருக்குள் சென்ற மலைப்பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர் குடியிருப்பு பகுதிகளில் மலைப் பாம்பு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் குப்பை கூளங்கள் அதிக அளவில் தேங்கியுள்ளது .முட்புதர்களும் அதிகமாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்