ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மாநில பொதுக் குழுக் கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் தலைமையில் நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள தனியார் மஹாலில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மாநில பொதுக் குழுக் கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் G.R. கார்த்தி தலைமையில் நடைபெற்றது.அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், மாடு உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி அளித்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியினை தெரிவித்து தீர்மானம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், மாடுபிடி வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று செயல்படுத்திட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்