அவனியாபுரத்தில் உள்ள பாண்டிய மன்னர் காலத்திய கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் உள்ள பாண்டிய மன்னர் காலத்திய கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் உள்ளதுஇந்த கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்கள் சிறப்பு அபிஷேகங்கள் சனி பகவானுக்கு நடைபெற்றது. இதில் குறைவான பக்தர்கள் முக கவசங்களுடன் கலந்து கொண்டனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்