மதுரையில் கார் மூலம் கஞ்சா கடத்தல் வழக்கு இருவருக்கு 10ஆண்டு சிறை

கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கார் மூலம் 85கிலோ கஞ்சாவை காரில் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பேரையூரை சேர்ந்த கணேசன், ஆந்திராவை சேர்ந்த ராண்டி அச்சிதபாபு ஆகிய இருவருக்கும் 10ஆண்டுகள் சிறை மற்றும் 1லட்சம் ரூபாய் அபராத தொகையை விதித்து மதுரை மாவட்ட போதைபொருள் தடுப்புபிரிவு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி பத்மநாபன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்