
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை,கரிசல்காலாம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்க கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் 1,478 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டதுதஞ்சாவூர் பகுதி நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.அது போல சிவரக்கோட்டை பகுதியில் கம்பு, கேழ்வரகு, சோளம், ராகி, தினை போன்ற பயிர்களின் விளைச்சல் அதிகமாக உள்ளதால் இப்பகுதி சிறு தானிய களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.எனவே நிலங்களை கையகப்படுத்தினால் விளைச்சல்பாதிக்கும் என்று விவசாயிகள் நீண்டகாலமாக போராடி வந்தனர்.மேலும் நிலம் கையகப்படுத்துவதை ஆட்சேபித்து இந்த 3 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்ற பல கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேற்கூறிய காரணங்களை கருத்தில் கொண்டு கிராம மக்களின் நலனையும், விவசாயகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சிவரக்கோட்டை ,கரிசல்காலாம்பட்டி, மற்றும் சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் 1478 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது குறித்து பரிசீலிக்க அமைச்சர் ஆர். பி. உதயகுமாரிடம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.இதனை தொடர்ந்து முதலமைச்சர் கவனத்திற்கு அமைச்சர் ஆர். பி.உதயகுமார் எடுத்து சென்றார்.இதையடுத்து விவசாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட இத்திட்டத்தை ரத்து செய்து முதல்வர் உத்தரவு இட்டார்.இதன் மூலம் தங்களின் நீண்ட வருட கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் ஆர். பி.உதயகுமாருக்கும் இப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.