Home செய்திகள் வேளாண் நிலத்தில் காட்டு பன்றியால் 1 லட்சம் மதிப்பில் பயிர்கள் சேதம்

வேளாண் நிலத்தில் காட்டு பன்றியால் 1 லட்சம் மதிப்பில் பயிர்கள் சேதம்

by mohan

திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தில் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் புகுந்து தட்டாம்பயறு, தக்காளி ,கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால்ரூ 1 லட்சம் மதிப்பில் விளை பயிர்கள் சேதம் .மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங் குருணி கிராமத்தில் கிராமத்தில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறதுஇதில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் தட்டாம்பயறு, தக்காளி, நிலக்கடலை பயரிடப்பட்டுள்ளது.இதை நள்ளிரவில் புகுந்த காட்டு பன்றிகள் கடித்து தின்று சேதமாகி நஷ்டத்தை ஏற்படுகின்றன.இதனால் விவசாயி கார்திகேயனுக்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளோ. வனத்துறையினரோ விரைந்து நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என்றும் .தற்போது காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் ஏற்பட்ட செய்வதற்கு நஷ்டஈடு வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com