இராஜபாளையம் முடங்கியார் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் சீரமைக்கக்கோரி சிபிஎம் கட்சி சார்பில் கண்ணை கட்டி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு சாலைகள் தோண்டப்பட்டதுஇந்நிலையில் காந்தி சிலை ரவுண்டானா பகுதியிலிருந்து முடங்கியார் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் கல்லூரிகள் இங்கு செல்லும் சாலை பணிகள் முடிவுற்ற போதும் புதிய சாலை அமைக்காததால் குண்டும் குழியுமாக காணப்படுவதுடன் மழைக்காலங்களில் அப்பகுதி வழியாக செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறதுஇப்பகுதியில் புதிய சாலை அமைக்க கோரி சிபிஎம் கட்சி சார்பில் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் அப்பகுதி மக்கள் இணைந்து கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபப்பனர்புதிய சாலைகளை அமைக்க நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்