
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள அம்மா மினி கிளினிக்கை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பின்னர் அமைச்சர் ஆர் வி உதயகுமார் பேசுகையில் கூறியதாவது:அம்மா கிளினிக் திறக்கும்போது நாங்கள் வேண்டுவது யாரும் வரக்கூடாது என்பதுதான் யாரும் நோய்வாய் படாமல் இருப்பதற்காகவே இந்த கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.எய்ம்ஸ் தொடர்பான ஆவணம் வருவாய்த்துறையிடம் தயாராக உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி . உதயகுமார் பேசினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.