சோழவந்தானில் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர் வட்டார அனைத்து வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்க கூட்டமைப்பின் சார்பில் வேளாளர் வெள்ளாளர் பெயரை மாற்று சமுதாயத்திற்கு வழங்க கூடாது போன்ற கோரிக்கைகளை மத்திய மாநில அரசை வலியுறுத்தி அரசியல்வாதிகளை கண்டித்து கண்டன கோஷம் இட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ரதவீதி வேளாளர் சங்க தலைவர் ராஜ்குமார் தெற்கு ரதவீதி சங்க தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தனர் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி வக்கீல் சத்தியமூர்த்தி மாநில மகளிரணி தலைவி சகிலா கணேசன் வாடிப்பட்டி சுந்தரபாண்டியன் பொன்னையா முன்னிலை வகித்தனர் சங்க துணை தலைவர் ஜெயராம் வரவேற்றார் பொருளாளர் அருணாச்சலம் துவக்கினார் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வ. உ. சி. சிதம்பரம் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் நிர்வாகிகள் கண்ணன் நாகேந்திரன் பெரியசாமி அழகு பிள்ளை மற்றும்வாடிப்பட்டி தேனூர் தச்சம்பத்து திருவேடகம் தென்கரை மன்னாடிமங்கலம் முள்ளிப்பள்ளம் மேலக்கால் உட்பட பல ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்