மதுரையில் ஒரே நாளில் நான்கு பேர் தூக்குப்போட்டு தற்கொலை.

மதுரைகீரதுறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் 57 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.இவருக்கு நிரந்தர வேலை இல்லை இதனால் மனமுடைந்து காணப்பட்ட முத்துராமலிங்கம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுதொடர்பாக மகன் அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் கீரத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணைகுழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரைபெத்தானியாபுரம் அண்ணா மெயின்ரோடை சேர்ந்தவர் ராஜமோகன் மகன் கார்த்திக் 27. இவருக்கு திருமணம் ஆனது முதல் குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கார்த்திக் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸ் தேர்வுஎழுத முடியாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.போலீஸ் தேர்வு எழுத முடியாமல் போனதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை கூடல்புதூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் வினோத்குமார் 24 .இவர் போலீஸ் வேலையை கனவாகக் கொண்டிருந்தார் .அதற்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் சரியாக தயாராகமுடியவில்லை.இதனால் தேர்வு எழுத செல்லவில்லை. இதனால் மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக அப்பா கொடுத்த கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை.கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கூடல்புதூர் செல்லையா நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் காயத்திரி 23. இவர் 2018 காதல் திருமணம் செய்து கொண்டார். கணவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. குடித்துவிட்டு இவர் வீட்டுக்கு வருவ வந்ததால் மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த காயத்ரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி அம்மா பெரியநாயகி கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்