கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம். கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில்பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் மற்றும் அலுவலகங்களில் RSS -ன் தூண்டுதலின் பெயரில் திட்டமிட்டு அமலாக்கத் துறை மூலம் நடத்தப்பட்ட சோதனையினை கண்டித்துபாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்11 – 12-2020 மாலை 4-00 மணியளவில் வெள்ளிக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.NPR ,NRCயை புறக்கணிக்க பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு கொடுத்ததும்,RSSன் செயல் திட்டத்திற்குதொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் குரல் கொடுப்பதன் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் இன்று குறி வைக்கப்பட்டுள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் மீது திட்டமிட்டு பழி சுமத்தும் RSS, பிஜேபியை இன்னும் வீரியம் கொண்டு மக்கள் சக்தியோடு பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்கொள்ளும் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அறியத்தருகிறோம்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் F.#முஹம்மத்_கலில் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஏஜாஸ்,B. அப்துல் கலீம்,G. முஹம்மது பாரூக் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்SDPI கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் ஷபியுல்லா, மாவட்ட பொருளாளர் சௌத் அஹமத், மாவட்ட துணைத் தலைவர் ஷாநவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பேச்சாளர் A.சலாமத், விடுதலை சிறுத்தை கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், SDPI கட்சி மாவட்ட தலைவர் H.அஸ்கர் அலி, தமுமுகவின் மாவட்ட துணைத்தலைவர் A.ஜாகிர் ஆலம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்சாண்டர், தமிழ் தேசிய குடியரசு இயக்க தோழர் ராமமூர்த்தி,IUML மாவட்ட பொருப்பாளர் Y.இலியாஸ்,ராஸிக் தவ்ஹீத் ஜமாஅத்,ஆகியோர் கண்டன உரையாற்றினர் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.சையது அமீன் நன்றி உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில்,பாப்புலர் ஃப்ரண்ட் இயக்க சகோதரர்கள், SDPI, வி.சி.க ,த.மு.மு.க,முஸ்லீம் லீக், தமிழ் தேசிய குடியரசு இயக்கம் உள்ளிட்ட கட்சி மற்றும் இயக்க நிர்வாகிகள் ,ஜமாத்தார்கள் உட்படமேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.