
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் ரஜினி ரசிகர் ரஜினி பிறந்த நாளை கொண்டாடினார் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஐயப்ப நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜினி செல்வம் 42 இவர் ரஜினி பிரியர் இவர் ரஜினி நடிக்க கூடிய படத்தில் வரக்கூடிய வேடங்களை அவ்வப்போது ரஜினி போல் மாற்றி அந்த உடையில் வலம் வருவார் இவர் 1996 ஆம் ஆண்டு ரஜினி ஆட்டோக்காரர் வேடத்தில் ஆட்டோ டிரைவராகவந்ததை பார்த்த நாள் முதல் இன்றுவரை சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார ரஜினி படம் எப்பொழுது வெளியிடப்பட்டாலும் முதல் ஆளாக சென்று ரஜினி படத்தை பார்த்து ரசிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் சிலரையும் அழைத்துக் கொண்டு ரஜினி படத்தை பார்க்க வைப்பார் ரஜினி படம் திரையிடப்பட கூடிய நாளில் இருந்து கடைசிநாள் வரை ரஜினி படத்தை பார்த்து ரசிப்பார் ஆட்டோவில் செல்லக்கூடிய நேரங்களில் எங்காவது ரஜினி பாடல் பாடினால் ஆட்டோவை நிறுத்தி விட்டு ரஜினி பாடலை முழுமையாக ரசிப்பார் வருடந்தோறும் ரஜினி பிறந்த நாளன்று சென்னை சென்று போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்து வாழ்த்துக் கூறி ரஜினியிடம் ஆசி பெற்று வருவார் கடந்த சில ஆண்டுகளாக ரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர் வரக்கூடாது என்று சொன்னவுடன் அங்கு செல்லாமல் குரு பகவான் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ரஜினி கோவில் என்று கூறி அங்கு ஒவ்வொரு வருடமும் ரஜினி பிறந்தநாள் அன்று அன்னதானம் வழங்கி வருகிறார் இந்த ஆண்டு ரஜினி கட்சி தொடங்க இருப்பதால் ரஜினி பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து அதிகமான எண்ணிக்கையில் அன்னதானம் வழங்கினார் இவர் ரஜினிகாந்த் வெறித்தனமான ரசிகர் தீவிர ரஜினி ரசிகரான இவர் தகர வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருகிறார் ரஜினி போன்று உடை அணிவதும் அவரைப்போல் ஸ்டைல் செய்வதும் வழக்கமாக கொண்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.