Home செய்திகள் அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் இல்லையென வீரகுல அமரன் இயக்கம் சார்பில் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு

அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் இல்லையென வீரகுல அமரன் இயக்கம் சார்பில் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மாநகராட்சிக்குட்பட்ட அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ய வரும் நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் இல்லை என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர் என்று வீரகுல அமரன் இயக்கம் சார்பில் குற்றச்சாட்டி மாநகராட்சியை கண்டிக்கும் விதமாக போஸ்டர் அடித்துள்ளனர்.மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதாரநிலையத்தை நம்பியே அப்பகுதியை சுற்றியுள்ள மூன்று கிராம பொதுமக்கள் உள்ளனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தருபவர்கள் பெரும்பாலும் முதியவர்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது, மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இப்பகுதியில் அதிகளவு உள்ளதாகவும், இதற்காக அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இந்நோயாளிகள் வருகின்றனர், அவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லையென ஊழியர்கள் கூறுவதாகவும் இதனால் மருந்துகள் – மாத்திரைகளை வாங்குவதற்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளதாகவும் அல்லது தனியார் மருத்துவமனைகள், மருந்துகடைகள் வாங்கவேண்டிய சூழல் இருப்பதாகவும் நோயாளிகள் கூறியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் இந்தபோக்கை கண்டிக்கும் விதமாக அவனியாபுரம் வீரகுல அமரன் இயக்கம் சார்பில் மாநகராட்சியை கண்டிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியருக்கு கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் அவனியாபுரம் பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com