Home செய்திகள் சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு உதவிய உளவுத்துறையினர்

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு உதவிய உளவுத்துறையினர்

by mohan

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு விசாரணை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 9பேரும் மதுரை மத்திய சிறையிலிருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தபட்டனர்,இந்நிலையில் செய்தி சேகரிப்பதிற்காக நீதிமன்றத்தின் கீழ் நுழைவாயில் பகுதியில் நின்று ஒளிப்பதிவு செய்தனர்,இதையடுத்து வழக்கு முடிவடைந்து சிறைக்கு அழைத்துசெல்லும் போது குற்றம்சாட்டப்பட்ட நபர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றியபோது மதுரை மாநகர காவல்துறை உளவுத்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஊடகத்தினர் குறித்து தவறுதலாக கூறியதால் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஊடகத்தினரை அவதூறாக பேசியபோதோடு தகாத வார்த்தைகளால் திட்டினர்,குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை நபர்களுக்கு ஆதரவாக மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் மதுரை மாநகர காவல்துறை உளவுத்துறை பிரிவினர் செயல்பட்டுவருவதோடு ஊடகத்தில் செய்தி வெளியாவதை தடுக்கும் நோக்கில் செயல்பட்டனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை சாதரணமாக பேசுவதற்கு மாநகர காவல் உளவுத்துறை அதிகாரிகள் உதவியதை ஒளிப்பதிவு செய்ய முயன்றபோது குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஊடகத்தினரை நோக்கி அவதூறாக பேசி தாக்க முயன்றதால் நீதிமன்றம் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது,காவல்துறையினரின் செயல்பாட்டை பார்த்த பொதுமக்கள் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் காவல்துறையினர் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com