மதுரை திருப்பாலையில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பொருட்கள் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை.

மதுரை திருப்பாலை யில் ஜெராக்ஸ் கடையை உடைத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை தத்தநேரி அருள்தாஸ் புரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் 24. இவர் திருப்பாலை உச்சபரம்பு மெயின் ரோட்டில் காயத்ரி நகர் 3வது தெருவில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.இவர் வழக்கம்போல கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை கடைக்கு வந்த போது கடையின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜெராக்ஸ் மிஷின் கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் சாமான்கள் திருடப்பட்டிருந்தது. இந்த திருட்டு தொடர்பாக அசோக்குமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்