Home செய்திகள் மதுரை விமான நிலையத்தில் நடமாடும் கட்டளையிடும் வாகனம் (mobil Commond post) அறிமுகம்.

மதுரை விமான நிலையத்தில் நடமாடும் கட்டளையிடும் வாகனம் (mobil Commond post) அறிமுகம்.

by mohan

மதுரை விமான நிலையத்தில் புதிய தகவல் தொழில் நுட்ப வசதி கொண்ட கட்டளை வாகனத்தை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.விமான நிலையம் மற்றும் அருகில் விமானம் விபத்துக்குள்ளாகும் போது அல்லது கடத்தப்படும் போது துரிதமாகச் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை விமான நிலையத்தில் நடமாடும் கட்டளையிடும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூபாய் 43 லட்சம் மதிப்புள்ள அதி நவீன வசதிகளுடன் கண்காணிப்பு கேமரா, தொலை தொடர்பு வசதி, இரவு நேர தொலை நோக்கி, ஹைமாஸ் லைட் ( உயர் மின் அழுத்த விளக்குகள்)அவசரகால ஆலோசனை கூட்டம் நடைபெறும் வகையில் சிறிய கூடம் அடங்கிய வாகனம் பயன் பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.விமானங்கள் தரை இறங்கும் போதோ அல்லது புறப்படும் போதோ சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது.இதேபோல் விமானத்தை கடத்த முயற்சி நடைபெறுகிறது இதனை விமான நிலைய அதிகாரிகள் தெரிந்துகொண்டு செயல்படுவதற்கு முன் விபத்து அல்லது கடத்தலைத் தடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில் விமான விபத்தை தடுக்கவும் விமானங்களை கடத்துவதில் இருந்து பாதுகாக்கவும் மேலும் இதுபோன்ற சூழலில் விமானத்தில் இருக்கக்கூடிய பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து நடவடிக்கை எடுக்கும் விதமாக மதுரை விமான நிலையத்தில் நடமாடும் கட்டளையிடும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த வாகனத்தில் அதன் 11 பாதுகாப்பு பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் இருப்பார்கள்.புதிய கட்டளையிடும் வாகனத்தை இன்று மதுரை விமான நிலையத்தில் இயக்குனர் செந்தில் வளவன் அறிமுகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நடமாடும் கட்டளையிடும் வாகனமானது விமான ஓடு தளங்கள் மற்றும் விமானம் நிறுத்தக் கூடிய இடங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் இதன்மூலம் திடீரென விபத்து ஏற்பட்டாலோ அல்லது விமானம் கடத்தப்படும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக இந்த வாகனத்தில் சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பயணிகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.பேட்டி. செந்தில் வளவன், மதுரை விமான நிலைய இயக்குனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!