
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பாம்பன் நகரில் வசிப்பவர் நந்தினி. இவரது சகோதரர் காமராஜ் (வயது 21) சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப மேலாண்மை குறித்து பயின்று வந்த காமராஜ் நேற்று மாலை நண்பர்களுடன் பாம்பன் நகர் அருகில் உள்ள கிணற்றில் குளித்த போது நீரில் முழ்கி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் காமராஜர் உடலை கிணற்றிலிருந்துமீட்டனர்.இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜர் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.