
வைகை ஆற்றுக்கு வரும் நீராதாரமாக உள்ள தேனி மாவட்டத்திலும் மற்றும் மதுரை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் வைகை ஆற்றில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் வைகை ஆற்றில் கருவேல முட்கள், ஆகாயத் தாமரை மற்றும் செடிகள் இருப்பதால் வைகை ஆறு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த பகுதியில் தற்போது மாநகராட்சி சார்பில் ஆகாயத்தாமரை, முட்கள் போன்றவை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. கோரிபாபாளயம் கல்பாலம் வைகை ஆற்றுப்பகுதியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியினை கூட்டுறவுத் துறைஅமைச்சர் செல்லூர் கே. ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.