
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 52 )இவர் சோளங்குருணி கிராமத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தனது மாருதி ஆம்னி காரில் மைக் செட் பொருத்தி கொரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து காவல்துறைக்கு உதவி புரிந்தார்.இதற்காக திருமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வினோதினி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கொரான தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து செய்யும் போதேகடந்த செப்டம்பர் மாதம் அவனியாபுரம் போக்கு வரத்து காவல் துறை சார்பில் ரவிச்சந்திரனுக்கு 600 ரூபாய் அபதார ரசீது அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீஸாரிடம் கேட்கப்பட்டதற்கு சீட் பெல்ட் அணியதாலும், விதிமுறையை மீறி நிறுத்தச் சொல்லி நிறுத்ததினாள் அபதாரத்தை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.ஒருபுறம் காவல்துறை காக சிறந்த சேவையை பாராட்டி சான்றிதழ் பெற்றாலும் மற்றொருபுறம் போக்குவரத்து காவல்துறை சார்பில் 600 ரூபாய் அவதாரம் அளித்தது தனக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும். வாரம் 2 ஆயிரம் ரூபாய் கேஸ் போட்டு சொந்த செலவில் கொரான விழிப்புணர்வு செய்த எனக்கு இதனால் மன வேதனை அளிக்கிறது.எனக்கு 1 லட்ச ரூபாய் பணம் செலவும் செய்து இந்த அபதாரம் விதித்ததால் நஷ்டமும் ஏற்பட்டது என வேதனையுடன் கூறினார்6 மாதமாக கொரான விழிப்புணர்வு சேவை செய்து பணியாற்றிய ரவி சந்திரனின் சேவைக்காக காவல்துறை உயரதிகாரிகள் அபதார தொகையை ரத்து செய்வார்களா ?
You must be logged in to post a comment.