Home செய்திகள் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

இராஜபாளையம் முடங்கியார் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடாத நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்தற்போது தொடர்ந்து இராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் அவல நிலை உள்ளது முதியவர்கள் சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது இராஜபாளையம் நகர் பகுதியில் புதிதாக வரக்கூடியவர்கள் முடங்கியார் சாலையில் செல்லக்கூடிய சம்மந்தபுரம் பகுதி , தென்றல் நகர், திருவள்ளுவர் நகர் , வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் இந்த பகுதிக்கு செல்ல வேண்டுமானால் ஆட்டோக்களை நாடிச் சென்றால் ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த பகுதிக்கு ஆட்டோ செல்ல முடியாது என்று சில ஆட்டோ ஒட்டுனர்கள் கூறுக்கின்றனர்மேலும் அப்பகுதிக்கு ரெகுலர் சவாரி ஏற்றி வரக்கூடிய ஆட்டோக்களில் அந்த பகுதிக்கு செல்ல ஆட்டோக்களும் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக கூறுகின்றனர் இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்நகரின் பல பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு அதில் சில பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு வருகின்றனர் ஆனால் இந்தப் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் கல்லூரிகள் மற்றும் அய்யனார் கோவிலுக்கு செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கடந்து செல்வதால் இந்த சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!