Home செய்திகள் பொதுமக்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துகொள்ளவேண்டும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வேண்டுகோள்.!!

பொதுமக்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துகொள்ளவேண்டும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வேண்டுகோள்.!!

by mohan

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டார். மாவட்டத்தில் மதுரை மாநகர் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்திய, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய 10தொகுதிகளுக்கான வரைவு பட்டியலில் மொத்த வாக்காளர்கள் : 26லட்சத்தி, 07ஆயிரத்தி 693 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 12லட்சத்தி 84ஆயிரத்தி 099பேரும், பெண் வாக்காளர்கள் : 13லட்சத்தி 23 ஆயிரத்தி 420 பேரும், மூன்றாம் பாலினத்தவர் : 174 பேரும் இடம்பெற்றுள்ளனர். மாவட்டத்தில் அதிக வாக்களார்களை கொண்ட தொகுதியாக மதுரை கிழக்கு :தொகுதியில் 3லட்சத்தி 14ஆயிரத்தி 248 வாக்காளர்களும், குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியான சோழவந்தான் தொகுதியில் 2லட்சத்தி 11ஆயிரத்தி 054 வாக்காளர்களும் உள்ளனர். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் நடைபெற்ற வரைவு வாக்காளர் பட்டியல் பணிகளின் அடிப்படையில் 9மாதங்களில் 48,113 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய வாக்காளர்களாக 12, 501வாக்காளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையிலிருந்து 35, 612பேர் குறைந்துள்ளது, மாவட்டத்தில் ஆயிரத்தி 115 வாக்குச்சாவடி மையங்களும், 2ஆயிரத்தி வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசுகையில் :மாவட்டத்தில் ஜனவரி 1ஆம்தேதியை அடிப்படையாக கொண்டு 18வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்களை பட்டியலில் இணைத்துகொள்ளவும், ஏற்கனவே பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயரை முகவரி மாற்றம், சேர்க்க நீக்க வாக்காளர் சேர்ப்பு முகாம் : வாக்குச்சாவடி மையங்கள், வட்டாச்சியர், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனவும், தரமான தெளிவான அடையாள அட்டைகளை இ-சேவை மையங்களில் பெற்றுகொள்ளலாம் எனவும், அடுத்த வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் சரிபார்த்துகொள்ள வேண்டும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com