
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் காவல் நிலைய போலீஸாருக்கு அப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸார் சேத்தூர் வளையர் தெரு, அரசு தொடக்கப்பள்ளி பின்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆனைமலை(30), அழகர்சாமி(30) ஜோதிகுரு(19) மலையரசன்(36), கிருஷ்ணன்(45), ராக்கன்(35), தவிடன்(40),மாசானம்(19), ஆகிய எட்டு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.