கட்டுமானத்துறையில் தினமும் பல்வேறு புதுமைகள் வருகின்றன.

கட்டுமானத்துறையில் தினமும் பல்வேறு புதுமைகள் வருகின்றன. மக்களின் அலங்கார விருப்பத்திற்கு ஏற்ப புதிய, புதிய கண்டுபிடிப்புகள் மக்களை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் பாலிமார் பில் இன்டீரியர் துறையில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.ஆர்.எஸ்.கே., குரூப் நிறுவனம் தற்போது எக்ஸ்பீரியர் துறையில் கால் பதித்துள்ளது.இந்தியாவில் எக்ஸ்டீரியர் பாலிமார்பிள் ஷீட் துறையில் இதுவே முதலாவதாகும். இதுவரை பாலிமர்கள் சீட்டில் தென்தமிழகத்தில் இன்டீரியர் துறையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் 125 கிளைகளை கொண்ட ஏ.ஆர்.எஸ்.கே., நிறுவனம் தற்போது எக்ஸ்டெரியர் துறையில் இந்தியாவில் முதன்முறையாக விற்பனையை துவக்கி உள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் எக்ஸ்டீரியர் பாலிமர் ஷீட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மதுரை மேலமடையில் இந்தியாவின் தலைமை அலுவலகத்தை கொண்ட ஏ.ஆர்.எஸ்.கே., நிறுவன திறப்பு விழா நேற்று நடந்தது. ஏஆர்.எஸ்.கே., சேர்மன் ரியாஸ் வரவேற்றார். எஸ் நிறுவன சேர்மன் நீதி மோகன் புதிய எக்ஸ்டீரியர் நிறுவன அலுவலகத்தை துவக்கி வைத்தார். மாநகராட்சி முன்னாள் உதவி கமிஷனர் தேவதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மதுரை விற்பனை மேலாளர் அருள்சபரி மற்றும் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்