காவல் பணி மட்டும் எங்கள் பணி அல்ல தூய்மைப் பணியில் எங்கள் பணியை என காவல் நிலையத்தை தூய்மைப்படுத்திய காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் .

மாநகர காவல் ஆணையாளர் பாராட்டு.. மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் சி 2 காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையில் காவலர்கள் உடன் இணைந்து இன்று காவல் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர் இதில்.. நுழைவாயில் பொதுமக்கள் அமரும் இடம் ஆண்கள் காவலர்கள் ஓய்வு அறை.. பெண்கள் காவலர்கள் ஓய்வு அறை .. காவல் ஆய்வாளர் அறை மற்றும் கணினி அறை வாகன நிறுத்தம் இடம் உள்ளிட்ட காவல் நிலையம் முழுவதையும் காவல் ஆய்வாளர் உட்பட அனைவரும் இணைந்து சுத்தப் படுத்தியது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது மேலும் செயலுக்கு காவல் ஆய்வாளர் உள்பட அனைத்து காவலர்களையும் மதுரை மாநகர காவல் ஆணையாளர். துணை ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை