Home செய்திகள் இந்தியாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் அதிகமான எழுத்துக்கள் , கல்வெட்டுகள் தமிழ் மொழியை சார்ந்தவை மத்திய தொல்லியல் துறை தகவல்.

இந்தியாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் அதிகமான எழுத்துக்கள் , கல்வெட்டுகள் தமிழ் மொழியை சார்ந்தவை மத்திய தொல்லியல் துறை தகவல்.

by mohan

இந்திய வரலாற்றில் முதன்முறையாக கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் தமிழ் நெடில் குறில் அ,ஆ,இ,ஈ போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மத்திய தொல்லியல் துறை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் – தகவல்.இந்தியாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் அதிகமான எழுத்துக்கள் , கல்வெட்டுகள் தமிழ் மொழியை சார்ந்தவை மத்திய தொல்லியல் துறை தகவல்.அதிக கல்வெட்டுகள் எழுத்துக்கள் தமிழ் மொழியில் இருக்கின்ற சூழலில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என – நீதிபதிகள் கேள்வி.கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை வயது மற்றும் காலங்களை கண்டுபிடிக்க கார்பன் டேட்டிங் சேதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா சோதனை மையத்திற்கு அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி யில் கண்டெடுக்கப்பட்ட. பொருட்களின் வயதை கார்பன் டேட்டிங் முறையில் கணித்த போது, , கிமு 696 to கிமு 540 என்றும் ,,கிமு 906 முதல் 805 என தெரிய வருகிறது.இதற்கான பணிகளை 10 நாட்களில் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.நெல்லை சேர்ந்த எழுத்தாளர் முத்தா லங்குறிச்சி காமராஜ்,” தமிழ் தொல்குடிகள் வாழ்ந்ததை ஆதாரங்களுடன் உறுதி செய்ய உதவும் வகையில், கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்கள், சிவகளை, கொந்தகை கிராமங்களில் அகழாய்வு நடத்த உத்தரவிடக் கோரின்வழக்கு தொடர்ந்திருந்தார். மதுரையிலுள்ள சமணர் படுகை உள்ளிட்ட அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com