ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் OHT ஆப்ரேட்டர்கள் என 3,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனோ கால ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்,ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழு அரசாணை எண் 303 ன் படி ஊதிய உயர்வு மற்றும் அரியர்ஸ் வழங்க வேண்டும், உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்