திருமங்கலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வேன் ஓட்டுனர் கிளீனர் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி

ஓசூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற பூ ஏற்றி வந்த சரக்கு வேன் திருமங்கலம் – மதுரை நான்கு வழிச்சாலையில் கப்பலூர் தனியார் மில் அருகே தூத்துக்குடி நோக்கி காய்கறி ஏற்றி சென்ற முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது இதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு மற்றும் திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த திருமங்கலம் டவுன் தீயணைப்பு துறையினர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு துறையினர் ஈடுபாடுகள் சிக்கியிருந்த.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயப்பேட்டை சேர்ந்த வேன் ஓட்டுநர் சேகர் 35 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெரிய கும்மனூரை சேர்ந்த வேன் கிளீனர் சாம்ராஜ் 50 இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் உடலை மீட்டு திருமங்கலம் போலீசார் விசாரணை அதிகாலை 2 மணி அளவில் நடந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இதே இடத்தில் இதே போன்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்