மதுரை விமான நிலையத்தில் கொரான தொற்று காலங்களில் சிறப்பாக பணியாற்றிய திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் கொரான தொற்று உறுதி செய்வதற்காக சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வந்தனர்.உள்நாட்டிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவதற்கு வரும் பயணிகளிடம் கொரான தொற்று பரிசோதனை செய்தனர்.இதனைத் தொடர்ந்து கொரன தொற்று காலங்களில் மதுரை விமான நிலையத்தில்சிறப்பாக சேவை செய்து பணியாற்றிய திருப்பரங்குன்றம் வட்டார முதன்மை மருத்துவர் சிவகுமார், திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் பாராட்டி சான்றிதழ் . மற்றும் நினைவு பரிசு வழங்கினர்.மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன், விமான நிலைய கட்டுபாட்டு மேலாளர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்