
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் 1200 கோடி செலவில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.இதில் தற்போது நிர்வாக குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டதில் பாஜகவை சேர்ந்த டாக்டர் சண்முகம் சுப்பையாவை நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் காசிநாதன், மாநில காங்கிரஸ் தகவல் அறியும் குழு இணைச் செயலளர் சத்தியன் சிவன். மாவட்ட தலைவர் நவீன் குமார் உள்ளிட்ட 20 பேர் Dr.சண்முகம் சுப்பையா கொடும்பாவியை எரித்தனர்.கொடும்பாவி எரித்த காங்கிரஸ் கட்சியினரை ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.