திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பணி இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள், வியாபாரிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்

திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மதன கலாஇவர் தற்போது வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இதனையொட்டி திருப்பரங்குன்றம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பாக திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து கொரோனா காலத்தில் கருணையோடு எளிய மக்களுக்கு வனவிலங்குகளுக்கு உணவுப்பொருள் கொடுத்த காவல் ஆய்வாளர் மதனகலா அவர்களை தயவுசெய்து இடமாற்றம் செய்யாதீர் எனக்கூறி திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்