Home செய்திகள் குடும்பத் தகராறில் குடிபோதையில் தன் மனைவியின் தம்பி அடித்துக் கொன்ற அக்காவின் கணவர்

குடும்பத் தகராறில் குடிபோதையில் தன் மனைவியின் தம்பி அடித்துக் கொன்ற அக்காவின் கணவர்

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மகள் சுகந்தி யை அதே பகுதியை சேர்ந்த முத்துவின் மகன் அழகேந்திரனுக்கு (வயது 48 )திருமணம் செய்து கொடுத்துள்ளார் இந்நிலையில் இன்று கருப்பசாமியின் மகன் கணிராஜ் (வயது 38) அழகேந்திரன் , வெள்ளையப்பன் ( மற்றொரு அக்காவின் கணவர்) ஆகிய மூன்று பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர் குடிபோதையில் அது சமயம் மது குடும்ப பிரச்சனைகளை பேசிக்கொண்டிருந்தபோது அழகேந்திரனுக்கும் கணிராஜ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது அழகேந்திரன் அருகே இருந்த கட்டையை எடுத்து கணிராஜ் மீது தாக்கியுள்ளார் இதில் கணிராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் வெள்ளையப்பன் இருவரையும் விலக்கி விட்டுள்ளார்

உடனடியாக ஊர் பொதுமக்கள் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் ஆனால் கணிராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இந்த கொலை சம்பவம் குறித்து சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் தலைமையில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அழகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செய்தியாளர் ,வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com