பட்டியல் பிரிவிலிருந்து நீக்கக் கோரி 5 பகுதிகளில் புதிய தமிழக கட்சியினர் உண்ணாவிரதம்

மூப்பர், கடையர், குரும்பர் ஆகிய உட்பிரிவுகளை நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும், பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வலியுறுத்தியும், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் 5 பகுதிகளில் உண்ணாவிரதம் புதிய தமிழக கட்சியினர் செவ்வாய்க்கிழமை இருந்தனர்.பாலமேட்டில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை, புதிய தமிழகம் கட்சியின் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜயக்குமார் தொடக்கி வைத்தார்.அலங்காநல்லூர் ஒன்றியச் செயலர் வெற்றிக்குமரன் முன்னிலை வகித்தார்.கட்சியைச் சேர்ந்த கார்த்திக், பாலமேடு நகரச் செயலர் செந்தாமரை, மதுரை மாவட்ட மாணவரணிச் செயலாளர் மணிவாசகம், ஒன்றிய இணைச் செயலாளர் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோல் பொம்மிநாயக்கன் பட்டியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில், நாட்டாம்மை மலர் மண்ணன், பாலுவும், முடுவார்பட்டியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கருப்பதுரையும், அய்யூரில் நடந்த உண்ணாவிரதத்தில், மாவட்ட துணைச் செயலர் பச்சையப்பன், மூக்கையா, மகளீர் அணி முருகேஸ்வரி, நாகையா, பிச்சை, ராசுவும், கோட்டைமேட்டில் மருது, பழனி ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்