
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர்,உதவியாளர் உள்ளிட்ட 350 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்திரவிட்டது.இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்த,நிலை செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது,இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்,நகராட்சி அலுவலகங்கள் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அக்டோபர் 5 கடைசி நாள் என்பதால் அதிகாலை 8 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை வழங்குவதற்கு அலுவலக வாசலில் காத்திருந்தனர், இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 11 மணி முதலே டோக்கன்கள் வழங்கப்பட்டு விண்ணப்பங்களுக்கான டோக்கன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக விண்ணப்பதாரர்கள் முண்டியடித்துக் கொண்டு தங்கள் விண்ணப்பத்தை அதிகாரியிடம் கொடுக்க முயன்றதால் அந்த பகுதியை தள்ளுமுள்ளு ஏற்பட்டது,மேலும் சமூக இடைவெளி இல்லாமல் முககவசம் அணியாமல் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது,மேலும் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியது. விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.