
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில், மதுரையில் பாடகர் எஸ்.பி.பி.க்கு இசை மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தொழில் வர்த்த சங்கத் தலைவர் என். ஜெகதீசன் தலைமை வகித்தார்.தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், எஸ்.பி.பி. சகாப்தம் என்ற தலைப்பில் பேசினார்.
சரஸ்வதி கண் மருத்துவமனை டாக்டர் ஜி. பாஸ்கரராஜன், இசைக் கல்லூரி முதல்வர் டேவிட், சேதுபதி மேல்நிலைப் பள்ளி செயலர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், சிவகங்கை இசைக் கல்லூரி முதல்வர் சுரேஷ் சிவன் ஆகியோர் புகழ் அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியை, மதுரை பாரதி யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் நெல்லை பாலு ஒருங்கிணைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.