
உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு ,மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் துவக்கி வைத்தார்.மண்டல இணை இயக்குநர் டாக்டர் ராஜ திலகன், துணை இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், பிரதம மருத்துவர் வைரவசாமி, மதுரை உதவி இயக்குநர் டாக்டர்,என்.ஆர் சரவணன், நோய் புலனாய்வு இயக்குநர் டாக்டர் எம்.எஸ்.சரவணன், மற்றும் அனைத்து கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களும் இதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதில் 579 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.