மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து.

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே விறகு ஏற்றிவந்த லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டியன். இவருக்கு சொந்தமான லாரியில் காளையார்கோவில் பகுதியிலிருந்து மதுரை அண்ணா நகர் பகுதிக்கு விறகு ஏற்றி கொண்டு வரப்பட்டது. இன்று அதிகாலை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே லாரி வரும்போது பின்புறம் டயர் வெடித்ததால் நிலைகுலைந்த லாரி சாலையில் கவிழ்ந்தது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் இதனால் எம்ஜிஆர் நிலையம் அருகே வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..