தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழி

செல்லம்பட்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் 124 அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பரமேஸ்வரி நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார் இதில் ஊட்டச்சத்து குறைபாடு அதை தடுப்பதற்கான ஊட்டச்சத்து உணவு அவசியம் மற்றும் ரத்தசோகை தவிர்த்தல் முக்கியத்துவம் பற்றி விளக்கி பேசினார் மேலும் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் விக்கிரமங்கலம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் போஷான் அபியான் திட்ட உதவியாளர் அங்கன்வாடி பணியாளர் வளரும் இளம் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் கலந்துகொண்டனர் வட்டார திட்ட உதவியாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..