
2021ல் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரையில் அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.2021ல் மீண்டும் ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற சவாலுடன் இறங்கியுள்ளனர் மதுரை அதிமுக நிர்வாகிகள்.வேட்பாளரை அறிவிப்பதிலும், பிரச்சாரத்திலும் மற்ற கட்சியினருக்கு முன்னோடிகளாக இருக்கும் அதிமுகவினர்,மற்ற கட்சிகள் சுவர் விளம்பரம் செய்ய தயாராவதற்கு முன்னரே மதுரை அதிமுகவினர் சுவர் விளம்பரம் செய்து முடித்து விட்டனர்.அந்த வகையில் தெற்கு 3ம் பகுதி துணைச்செயலாளர் ஜோசப் தனுஸ்லாஸ், வட்டச் செயலாளர்கள் மலைச்சாமி, மணிகண்டன்,முக்கூரான்,பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் மதுரை காமராஜர் சாலை,முனிச்சாலை, பகுதியில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரம் மதுரை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கீழை நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்
You must be logged in to post a comment.