மதுரை டவுண் ஹால் ரோடு தெப்பக்குளத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழைநீர் சேகரிப்பு

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு நீர்நிலைகளான குளங்கள், ஊரணிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் தெப்பக் குளத்தில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டது.அதே போன்று தல்லாகுளம் திருமுக்குளத்தில் மழைநீர் சேகரிப்பு செய்வதற்காக மழைநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு சுற்றுப் பகுதிகளில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தடையின்றி சென்று திருமுக்குளத்தில் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மண்டலம் எண்.4 வார்டு எண்.79ல் 50 மீட்டர் நீளம், 50 மீட்டர் அகலம், 5 மீட்டர் உயரம் கொண்ட டவுண்ஹால் ரோடு தெப்பக்குளம் நீண்ட காலங்களாக மழைநீர் சேகரிப்பு இல்லாமல் வறண்ட நிலையில் இருந்தது. இங்கு மழைநீரினை சேகரிக்கும் வகையில் ரயில்வே நிலையம், கட்டபொம்மன் சிலை வடக்கு புறம், தங்கரீகல் தியேட்டர் முன்புறம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரினை பயனுள்ள வகையில் கொண்டு செல்லும் பொருட்டு 500mm மற்றும் 700mm RCC பைப் பதிக்கப்பட்டு தெப்பக்குளத்திற்கு மழைநீர் கொண்டும் செல்லும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

குழாய்களில் மழைநீர் செல்லும்போது ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் சுத்தம் செய்யும் வகையில் 15 மீட்டர் இடைவெளியில் 1.20மீ நீளம், 1.20மீ அகலம் மற்றும் சராசரியாக 2.40 மீட்டர் முதல் 3.00 மீட்டர் ஆழத்தில் தொட்டிகள் அமைக்கப்பட்டு சுமார் 240 மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு மழைநீர் எடுத்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழைநீர் சாலைகளில் தேங்காமல் குழாய்கள் மூலம் டவுண்ஹால் ரோடு தெப்பக்குளத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் டவுண்ஹால் ரோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் இதுபோன்ற நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் மதுரை மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..